செய்திகள்

1500 நாளில் 40,075 கி.மீ. நடந்திருக்கும் 70 வயது பஞ்சாபி: ‘கின்னஸ்’ சாதனைக்கு விண்ணப்பம்

1500 நாளில் 40,075 கி.மீ. நடந்திருக்கும் 70 வயது பஞ்சாபி:

‘கின்னஸ்’ சாதனைக்கு விண்ணப்பம்

நடந்திருக்கும் தூரம் – பூமியின் சுற்றளவுக்கு சமம்

பஞ்சாபில் பிறந்து 40 ஆண்டுகளாக அயர்லாந்தின் நிரந்தரமாக குடியேறி இருப்பவர் வினோத் பாஜா. இவர் கடந்த 1500 நாட்களில் அதாவது சுமார் 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40,075 கிலோமீட்டர் தூரம் நடந்து இருக்கிறார். இது பூமியின் சுற்றளவுக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அசுர முயற்சிக்காக அவர் தன் பெயரை பதிவு செய்ய உலக கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்து இருக்கிறார்.

2016, ஆகஸ்ட் மாதம் எடையை குறைத்து, உடம்பு ‘ சிக் ‘ என்று இருக்கும் விதத்தில் தன்னை மாற்றிக் கொண்டார். நடக்கத் துவங்கிய முதல் 3 மாதங்களில் 8 கிலோ எடையை குறைத்தார். அடுத்த 6 மாதத்தில் மேலும் 12 கிலோ எடையை குறைத்தார். சாப்பாட்டு வழக்கத்தை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் நடை மூலம் எடை குறைத்தார்.

காலை மாலை என 2 வேலைகளிலும் நடை தொடர்ந்தது. ஷாப்பிங், வங்கி வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை இப்படி எல்லா வேலைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

பஞ்சாபில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர். ஓய்வு பெற்ற என்ஜினீயர். 1975 இம் ஆண்டு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் நிர்வாக இயலில் பட்டப் படிப்புக்காக சுவிட்சர்லாந்து சென்றார். பின்னர் அயர்லாந்தில் நிரந்தரமாக குடியேறினார். கடந்த 36 ஆண்டுகளாக புறநகர் பகுதியான லிமரிக் நகரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

ஒரு நாளைக்கு எத்தனை தூரம் நடக்கவும் என்பதை துல்லியமாக கண்டறிய ஸ்மார்ட்போனில் ‘பேசர்’ (Pacer) செயல்பாடு செயலியை பதிவிறக்கம் செய்தார். அதை கையில் வைத்துக் கொண்டு தான் நடக்கும் தூரத்தை பதிவு செய்ய ஆரம்பித்தார்.

என்ன ஆச்சரியம், முதலாம் ஆண்டின் இறுதியில் அவர் 7,600 கிலோமீட்டர் தூரம் நடந்து இருந்தார். அவராலேயே அதை நம்ப முடியாமல் விக்கித்து நின்றார். தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அப்படி நடக்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவரது செயலில் பதிவானது. 2ம் ஆண்டின் இறுதியில் அவர் 15,200 கிலோ மீட்டர் தூரம் நடந்து பதிவாகியிருந்தது. வானத்துச் சந்திரனின் சுற்றளவு 10,921 கிலோ மீட்டரை விட அதிகம் என்பதை கண்டு பிரமித்தார். இதில் ஏற்பட்ட பிரமிப்பு, அதன் தாக்கம் தொடர்ந்து நடக்க தொடங்கினார். 21,344 கிலோ மீட்டர் தூரத்தை எட்டியதும், அது செவ்வாய் கிரகத்தின் சுற்றளவுக்கு இணையானதாக இருந்ததை கண்டு ஆனந்தக் கூத்தாடினார். மீண்டும் நடையை தொடர்ந்தார். பூமியின் சுற்றளவு என்ன இருக்குமோ, அந்த அளவுக்கு நடக்க வேண்டும் என்று திடமாக ஒரு முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தார். செப்டம்பர் 21ந் தேதியன்று 5 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 135 அடிகளை எடுத்து வைத்துள்ளார்.

1496 நாட்களில் இப்படி நடந்திருக்கிறார். இவர் நடந்திருக்கும் தூரத்தை கணக்கிட்டால்… அது பூமியின் சுற்றளவுக்கு சமமானதாகும்.

இப்படி நடையாய் நடந்து அபார சாதனை படைத்திருப்பதற்காகவே, உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தன் பெயர் இடம்பெற வேண்டுமென்ற ஆசையில் கின்னஸ் சாதனை நிர்வாகத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *