வாழ்வியல்

எரிபொருளை சிக்கனப்படுத்த 7 வழிமுறைகள்!

Spread the love

பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகும் பயண அனுபவங்களுக்கு பிறகும் மோட்டார் பொறியியல் வல்லுனர்கள் கார் பயன்பாட்டில் எந்தெந்த வகைகளில் சக்தி செலவாகிறது? என்று கண்டறிந்துள்ளார்கள்.

அவையாவன:–

* 70 கி. மீ வேகம் என்பதைவிட 50 கி.மீ வேகம் என்பது காருக்கு ஆரோக்கியமான வேகம். மேலும் அதன் வாயிலாக மொத்த பாராமரிப்பு செலவில் 15 சதவீதம் மீதமாகும்.

* கொஞ்சம் தூரம் அதிகமாக இருந்தாலும் சுலபமான பாதையில் செல்லும்போது மொத்த பராமரிப்பில் 20 சதவிகித சேமிப்பு சாத்தியம்.

* குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடை வைக்கப்பட்ட நிலையில் காரில் பயணம் செல்வது எரிபொருள் செலவை 15 சதவிகித அளவு அதிகப்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

* மேற்கூரையில் பொருட்கள் வைப்பது, கண்ணாடிகள் திறப்பு ஆகியவற்றால் காற்றுத்தடுப்பு சீராக இல்லாமல் என்ஜின் 25 சதவிகிதம் அதிகபட்சமாக இயங்கும்.

* சரியான இடவெளியில் சர்வீஸ் இன்ஜின் ஆயில் சோதனை மற்றும் டயர்களில் காற்று அளவு ஆகியவற்றை கவனிப்பதால் 8 சதவிகித அளவு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.

* ஏசி மியூசிக் சிஸ்டம் மற்றும் வைப்பர் ஆகியவற்றை கவனிப்பதால் 8 சதவிகித அளவு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.

* 60 விநாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் நிற்க வேண்டியிருப்பின் இன்ஜினை ஆப்செய்வலது நல்லது .அதன் வாயிலாக 5 சதவிகிதம் அளவு எரிபொருள் சேமிப்பாகும். கார் ‘ ஐடிலிங்’ நிலையில் நிற்கும் போது மணிக்கு ஒரு லிட்டர் எரிபொருள் செலவாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *