வாழ்வியல்

ஆரோக்கிய சிறுநீரகத்துக்கு உதவும் 7 வகை உணவுகள்!–1

Spread the love

ஆரோக்கியமாகச் சாப்பிடும்போது, சிறுநீரகத்துக்கு நாம் அதிகம் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். ஆனால் உங்கள் உணவில் இந்த எளிய உணவுகளைச் சேர்த்து உண்ணும் போது, சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

வீட்டிலேயே கிடைக்கக் கூடிய எளிய மற்றும் தினந்தோறும் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தலாம். இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்ப்பது சிறுநீரக நோயைத் தவிர்ப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கையாகச் செயல்படுகிறது.

சோடியம் உட்கொள்வதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். “உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை மட்டுப்படுத்தப்பட வேண்டும். பதப்படுத்தப்பட்ட பொருட்களில், சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.”

மேலும், ஆரோக்கியமற்ற சிறுநீரகங்களுக்கு பாஸ்பரஸை பில்ட்டர் செய்வதில் சிக்கல் உள்ளது, எனவே சிறுநீரக ஆரோக்கியமான உணவுக்கு இந்த தாதுப்பொருளின் குறைந்த அளவு பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

* ஆப்பிள்

எப்போதும் ஆரோக்கியம் அளிக்கக் கூடியது ஆப்பிள். மேலும், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ஆப்பிள்கள் உதவும். ஆப்பிள்களில் இருக்கும் அதிக பெக்டின், சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவுகிறது.

* பெர்ரி

பெர்ரி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் பெற்றவையாக உள்ளது. ஸ்ட்ராபெர்ரி, ஃப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பழங்களை, சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

* சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுகளின் அளவு நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடுவதற்குச் சிறந்தது. அவற்றின் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் மெதுவாக உடைந்து, எடையும் குறைக்க ஏற்றதாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *