செய்திகள்

வங்கதேச தாக்குதல்: 7 பேருக்கு தூக்கு; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Spread the love

தாகா,நவ.28–

வங்கதேச ஓட்டலில் 2016ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஏழு பேருக்கு துாக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அண்டை நாடான வங்கதேச தலைநகர் தாகாவின் முக்கிய பகுதியான குல்ஷன் என்ற இடத்தில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி என்ற உணவகம் உள்ளது. இங்கு, ஜூலை 1, 2016ல், பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த ஒன்பது பேர், கிழக்காசிய நாடான ஜப்பானை சேர்ந்த ஏழுபேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த பெண் உட்பட, மொத்தம் 17 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு, நியோ ஜமாத் – உல் – முஜாகிதீன் வங்கதேசம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஐ.எஸ்., அமைப்பின் உதவியுடன், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு நிதி உதவி, ஆயுதங்கள் அளித்தது உட்பட, பல்வேறு உதவிகளை செய்த, எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். வங்கதேச பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குற்றவாளிகள் எட்டு பேரில், ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டார். மீதியுள்ள ஏழு பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *