சினிமா

‘ஞானச் செருக்கு’ தமிழ் படத்திற்கு 7 சர்வதேச விருதுகள்; 40 சர்வதேச அங்கீகாரம்: டைரக்டர் பாரதிராஜா வாழ்த்து!

Spread the love

‘ஞானச் செருக்கு’ – இந்தத் தமிழ் படத்தின் பெயரை உச்சரிக்கும் போதே அதில் ஒரு கம்பீரமும், கண்ணியமும் கவுரவமும் வலிக்கிறது அல்லவா? அது நிஜம்தான். எழுதி இயக்கியிருக்கும் தரணி ராஜேந்திரனின் இந்த படைப்பு முழு நீள திரைப்படம். உலக அளவில் மொத்தம் 40 சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் ஏழு சர்வதேச விருதுகளைக் குவித்து இருக்கிறது.

ஓவியர் வீரசந்தானம், ஜெயபாலன், வீர எய்னன், பரதமிழ்மாறன் (புது முகங்கள்)

ஆகியோர் நடித்திருக்கிறார்கள் இசை: சக்கரவர்த்தி, படத்தொகுப்பு : மகேந்திரன், ஒளிப்பதிவு: கோபி துரைசாமி, இணைத் தயாரிப்பு : ஜெகத்ரட்சகன். தயாரிப்பு பரணி இவர்கள் திரைமறைவுக் கலைஞர்கள்

தன்னாட்சி திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் காட்சி மொழி இல்லாமல் எதார்த்த பின்புலத்தில் மட்டும் சித்தரிக்க முயன்று தோற்றுப் போகின்றன. ஆனால் அதிலிருந்து இந்த ஞானச்செருக்கு சற்று விலகி இருக்கிறது கிட்டத்தட்ட மூன்று வருட கடின உழைப்பிற்குப் பிறகு இப்படம் தனக்கான அங்கீகாரத்தை சர்வதேச அளவில் பதித்திருக்கிறது.

முதல் படத்திலேயே சர்வதேச அளவில் பாராட்டு மேல் பாராட்டு பெற்றிருக்கும் இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்குனர் இமயம் பாரதிராஜா மனம் திறந்து பாராட்டினார். தான் இயக்க வேண்டிய இந்தப் படத்தை தரணி ராஜேந்திரன் இந்த இளம் வயதிலேயே எடுத்து இயக்கியிருப்பது தந்தை ஸ்தானத்தில் இருந்து வாழ்த்தி மகிழ்கிறேன். அவருக்கு வெற்றிகள் தொடர வேண்டும் என்று வாழ்த்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *