செய்திகள்

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதன்மைச்செயலாளர்களாக பதவி உயர்வு

சென்னை, ஜன.2–-

தமிழக பணியில் உள்ள 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:–-

அதன்படி, அரசுச் செயலாளர்கள் பதவியில் இருந்த டி.கார்த்திகேயன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஆகவும், எஸ்.சுவர்ணா பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை முதன்மைச் செயலாளராகவும், ஹர்சகாய் மீனா பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் ஆகவும், பீலா ராஜேஷ், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளராகவும் பதவிநிலை உயர்வை பெறுகின்றனர்.

அதுபோல, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர்- ஆஷிஸ்வச்சானி, தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மற்றும் டான்ஜெட்கோ தலைவர் பங்கஜ்குமார் பன்சால், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோரும் முதன்மைச் செயலாளர் என்ற பதவிநிலை உயர்வை பெறுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *