போபால், நவ. 9–
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. அப்போது காருக்குள் பயணம் செய்த அனைவரும் உடல் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்தக் கொடூர விபத்தில் 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.