உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தகவல்
கீவ், ஏப். 16–
8 வாரங்களாக நடைபெறும் போரில், 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்த நிலையில், பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
உயிரிழப்பு எவ்வளவு?
ரஷ்யா- உக்ரைன் போரைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதியில் 900 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலோர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி இது குறித்து கூறியதாவது:– உக்ரைன் –ரஷ்யா இடையேயான ஏழு வாரப்போரில் 2,500 முதல் 3,000 உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த போரின் எட்டாவது வாரத்தில் 19,000 முதல் 20,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.