நியூயார்க், மார்ச் 11–
பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் படம் 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளி சாதனை படைத்திருக்கிறது.
சினிமாவில் உச்சபட்ச கவுரவமாக கருதப்படுவது ஆஸ்கர் விருதுகள்தான். 96–வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டன.
முதலில் நடைபெற்ற ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் பல்வேறு ஹாலிவுட் நடிகைகள் அழகுப் பதுமைகளாக உடையணிந்துக் கொண்டு விருது விழாவை கண்கவர் நிகழ்ச்சியாக மாற்றினார்கள்.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளைத் தட்டியுள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்களின் முழுப்பட்டியல் வருமாறு:–
சிறந்த படம்: ஒப்பன்ஹெய்மர்
சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)
சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்
சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்ஷன்
சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்
சிறந்த ஒளிப்பதிவு: ஒப்பன்ஹெய்மர்
சிறந்த ஆடை வடிவமைப்பு: நெப்போலியன்
ஆவணக்குறும்படம்
சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்
சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்
சிறந்த எடிட்டிங்: ஒபன்ஹெய்மர்
சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: புவர் திங்ஸ்
சிறந்த ஒரிஜினல் இசை: இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி
சிறந்த ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்
அனிமேஷன் குறும்படம்
சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்
சிறந்த ஒலி: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்
சிலியன் மர்பி
7 விருதுகளை வென்ற ‘ஒப்பன்ஹெய்மர்’ – கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம். அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார்.
‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ரூ.820 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.8 ஆயிரம் கோடியை வசூலித்தது. ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் ஐந்து விருதுகளை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’.சிறந்த பாடல்
13 பிரிவுகளில் போட்டியிட்ட ஓபன்ஹெய்மர் 7 விருதுகளை வென்ற நிலையில், 8 பிரிவுகளில் போட்டியிட்ட பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பார்பி திரைப்படம் வெறும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை மட்டும் வென்றது. 2வதாக அதிக ஆஸ்கர் விருதுகளை புவர் திங்ஸ் படம் தான் தட்டிச் சென்றது.