சென்னை, ஜூன்.15-
தமிழக அரசு போக்குவரத்துக்கழகம், விரைவு போக்குவரத்துக்கழகம், மாநகர போக்குவரத்துக்கழகம் உட்பட பல்வேறு கோட்டங்களாக பிரித்து பஸ்களை இயக்கி வருகிறது. இதில் பெண் பயணிகளுக்கு இலவச பயணம், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆயிரம் புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக 600 பஸ்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதில் 150 முழுமையான தாழ்தள பஸ்கள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.