செய்திகள் நாடும் நடப்பும்

60 ஆயிரம் புள்ளிகளை எட்டிய பங்கு குறியீடு


ஆர். முத்துக்குமார்


உக்ரைனில் போர் நடவடிக்கைகளை ரஷ்யா அதிரடியாய் துவக்கிய நாளிலிருந்தே அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஏற்படுத்திய பொருளாதார முற்றுகைகளால் ரஷ்யாவை அடிபணிய வைத்து விடும் முயற்சிகள் துவங்கியதைக் கண்டோம்.

ஆனால் ரஷ்யா எல்லா தடைகளையும் தாண்டி வெற்றிநடை போட்டு வருகிறது. ஆனால் உலக வர்த்தகம் தான் பெரும் பாதிப்படைந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக ஆசியாவில் உள்ள அமைதிச் சூழல் உலக முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளாக தெரிய ஆரம்பித்து வருவதால் வீழ்ச்சியைக் கண்ட பொருளாதாரம் மீண்டு எழுந்து வளரத் துவங்கி விட்டது.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் ரஷ்யாவை அடிபணிய வைத்து விடலாம் என்று எண்ணியது நிறைவேறாது இருக்கிறது. அப்படி எளிதில் வீழ்த்தி விடலாம் என்பது வெறும் கற்பனை கோட்டை தான் என்பதையும் உணர்ந்து இருப்பார்கள்.

இன்று இங்கிலாந்தின் பண வீக்கம் 40 ஆண்டுகளில் கண்டிராத அடிமட்டத்தில் 10%க்கும் மேல் இருக்கிறது.

ஆனால் ஆசிய பகுதியின் முக்கிய பொருளாதார நாடுகளாக கருதப்படும் ஜப்பான், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் எல்லா குறியீடுகளும் ஓரளவு நிலையாகவே இருக்கிறது.

குறிப்பாக ஜப்பான், இந்திய நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கைகள் சிறப்புற செயல்படுவதாக அறிவிப்புகள் சுட்டிக் காட்டுகிறது.

நிதி நிறுவன, ஊடகத்துறை, ஐடி ஆகிய துறையில் உள்ள பல நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றம் கண்டு வருவதால் பங்கு மார்க்கெட்டில் எழுச்சியை காண முடிகிறது. இந்த எழுச்சியின் காரணமாக ஜப்பான் பங்கு குறியீடான நிப்தி 29,000 புள்ளிகளையும் இந்திய பங்கு குறியீடான சென்செக்ஸ் 60,000 புள்ளிகளையும் தாண்டி விட்டது.

இப்படி மூன்றே மாதங்களில் பங்குச் சந்தை 10,000 புள்ளிகள் அதிகரித்து இருப்பது சிறு முதலீட்டாளர்களுக்கு கவலை தரும். காரணம் இந்த ஏற்றம் நிலையானதா? என்ற அச்சம் தான்.

உண்மையில் உலக முதலீட்டாளர்களின் கவனம் ஆசிய வளர்ச்சிகளை ஆச்சர்யத்துடன் கண்டு வருகிறது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் நிலவும் பொருளாதார மந்தத்தை கண்டு பெரிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் நுழைய ஆரம்பித்துள்ளனர்.

இது நமது பொருளாதாரத்தின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சுட்டிக் காட்டுகிறது.

முதன் முதலில் நமது பங்குச் சந்தை 2021 செப்டம்பர் 24 அன்று தான் 60,000 புள்ளிகளை எட்டியது. 1990 ஜூலை 25ல் தான் 1000 புள்ளிகளை எட்டிய பங்குச் சந்தை 31 ஆண்டுகளுக்குப் பிறகே 60,000 இலக்கை எட்டியது.

10,000 புள்ளிகளை 2006லும் 20,000 புள்ளிகளை 2007லும் 30,000 புள்ளிகளை 2015லும் 40,000 குறியீட்டை 2019லும் எட்டியது.

2019 ஜனவரியில் 50,000 இலக்கை தாண்டியது. அதே ஆண்டல் செப்டம்பர் மாதத்தில் 60,000 எட்டியது.

ஆனால் 2020ல் 70,000த்தை தாண்டும் வலிமை இருந்தும் கொரோனா பெரும் தொற்று காரணமாக நிலை நிறுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பங்கு குறியீடு 50,000த்தையும் விட குறைந்தது.

ஆனால் கடந்த 3 மாதங்களில் 10,000 புள்ளிகள் உயர்ந்து 60,000 என்ற குறியீட்டை எட்டிவிட்டாலும் அடுத்த சில வாரங்களில் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் 65,000 புள்ளிகளை தாண்டும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *