புதுடெல்லி, ஆக.2-
2023-–24-ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் கடந்த ஜூலை 31-ந் தேதி ஆகும்.
இந்த நிலையில், சாதனை அளவாக 6.77 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இது 16.1 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு, 53.67 லட்சம் பேர் முதல் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது வருமான வரி தளம் விரிவடைவதை காட்டுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாளான ஜூலை 31-ந் தேதி ஒருநாள் மட்டும் 64.33 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.