செய்திகள்

6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை, பிப். 14

6 வது நாளாக, தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து, பெட்ரோல் ரூ.91க்கு விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன.

அந்த வகையில், சென்னையில் தொடர்ந்து 6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் விலை, நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.96 ஆகவும், டீசல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.84.16 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *