செய்திகள்

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதியில் இன்று இடைத்தேர்தல்

5 இடங்களில் இந்தியா கூட்டணி பொதுவேட்பாளர்

டெல்லி, செப். 5–

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒன்றிய பா.ஜ அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த நிலையில் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் உத்தரபிரதேசத்தில் கோசி தொகுதி, திரிபுராவில் உள்ள தன்பூர், போக்ஸாநகர், ஜார்கண்டின் டும்ரி, உத்தரகாண்டின் பாகேஷ்வர் ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

5 தொகுதியில் பொதுவேட்பாளர்

அதே சமயம் மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியிலும் இந்தியா கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை எதிர்த்து, போட்டி வேட்பாளர்களை மற்ற கட்சியினர் நிறுத்தி உள்ளனர். இந்த தொகுதிகளில் செப்டம்பர் 8 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சோதனை அடிப்படையில் இந்தியா கூட்டணி கட்சிகள் பா.ஜவுக்கு எதிராக 5 தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி உள்ளதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *