செய்திகள்

6 மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை: மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்

புதுடெல்லி, செப். 16–

கடந்த 6 மாதங்களில் இந்தியா – -சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.

கடந்த 6 மாதங்களில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து ஊடுருவல் வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது உண்மையா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ அளித்துள்ள பதிலில் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறி இருப்பதாவது:-

பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் ஊடுருவல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், நான்கு பேர் மார்ச் மாதத்தில், ஏப்ரல் மாதம் 24, மே மாதம் 8 மற்றும் ஜூலை மாதம் 11 பேர் ஊடுருவி தோல்வி அடைந்து உள்ளனர்.கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் ஏற்படவில்லை என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *