செய்திகள்

6 சிறப்பு ரெயில்கள் ரத்து: ஜூன் 15ந் தேதி வரை நீட்டிப்பு

சென்னை, மே 25–

கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால், மே 31ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த 6 சிறப்பு ரெயில்கள், தற்போது ஜூன் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் – கோவை இடையே, தினமும் பகல் நேரத்தில் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – திருச்சி இடையே இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், இரு வழிகளிலும் ஜூன் 15ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 15 வரை ரத்து

சென்னை சென்ட்ரல் – கர்நாடக மாநிலம் பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் இடையே தினமும் இயக்கப்படும் ‘ஏசி’ டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – மதுரை இடையே வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் ரெயில், இரு வழிகளிலும் ஜூன் 15ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில் – கோவை இடையேயும் கோவை – கர்நாடக மாநிலம் மங்களூரு இடையேயும் தினமும் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள், இரு வழிகளிலும் ஜூன் 15ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் அனைத்தும் இம்மாதம் 31ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த ரத்து தற்போது ஜூன் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *