செய்திகள் முழு தகவல்

565 சிற்றரசுகளை இந்தியாவோடு இணைத்து இரண்டுபங்கு பெரிய நாடாக்கிய சர்தார் படேல்!

இந்திய விடுதலையின் 75 ஆம் ஆண்டு நிறைவு!


மா. இளஞ்செழியன்


1947 இல் இந்திய விடுதலையின் போது, ​​இந்தியா இரண்டு பகுதிகளாக இருந்து வந்தது. ஒன்று ஆங்கில அரசின் நேரடி ஆட்சியின் கீழும், மற்றொன்று ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தின் கீழுள்ள சிற்றரசுகள் (சமஸ்தானங்கள்) என இரண்டு பகுதிகளாக இருந்தது. அதில் முதலாவது “பிரிட்டிஷ் இந்தியா” என்பதாகும். அது லண்டனில் இயங்கி வந்த இந்திய அலுவலகம் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. இரண்டாவது, மன்னராட்சி நடக்கும் சிற்றரசுகள் ஆகும். இங்கெல்லாம் மன்னர்கள் முடி சூடி நிலவுரிமையுடன் ஆட்சி செய்து வந்தனர். அப்பிரதேசங்கள் அவர்களது வாரிசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் மரபு வழியாக ஆட்சி செய்யப்பட்டன.

மேலும் பிரான்சு மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டணி ஆட்சி நடந்த சில காலனிப் பகுதிகளும் இருந்தன. வருவாய் பகிர்வு ஏற்பாடுகளுடன் செயல்பட்ட சிற்றரசுகளான சமஸ்தானங்களின் எண்ணிக்கை மட்டும் 565 ஆக இருந்தது. அவற்றின் பரப்பளவு, ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழிருந்த இந்தியாவைவை விட 2 மடங்கு பெரியது. இந்தியாவில் அப்போது இந்தப் பிரதேசங்களில் அரசியல் ஒருங்கிணைப்பே இந்திய தேசியக் காங்கிரஸின் குறிக்கோளாக இருந்தது, அடுத்த பத்தாண்டுகளுள் இந்திய அரசாங்கத்தின் முக்கிய செயல்பாடாகவும் அதுவே இருந்து வந்தது.

இந்தியாவுடன் 565 சிற்றரசுகள்

விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்தபோது, துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் சர்தார் வல்லப்பாய் படேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், காந்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, அவருடைய செயல்பாடுகளில் அணுக்க தொண்டராக இருந்தவர்களில் முதன்மையானவர். ஜவகர்லால் நேருவும் சர்தார் வல்லபாய் படேலும் தேசத்தந்தை காந்தியின் வலதும் இடதுமா இடதுமாக பணியாற்றியவர்கள். படேலின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட காந்தி, படேலுக்கு சர்தார் என்ற பட்டத்தை அளித்தார்.

அரசியலமைப்பை வரையும் குழுவின் தலைவராக பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரை நியமிக்கும் முடிவை எடுத்ததும் இவரே. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசு ஊழியர்கள் அமைப்பை உருவாக்கிட இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். அகில இந்திய “குடிமைப் பணிகளின் தந்தைˮ எனவும் இந்திய குடிமைப் பணியாளர்களுக்கான “புனித புரவலர்ˮ என்றும் படேல் அழைக்கப்படுகின்றார்.

பைத்தியகாரத்தனம்

இந்தியாவை ‘இந்து நாடாக’ மாற்றும் எண்ணத்தை ‘பைத்தியக்காரத்தனம்’ என்று வெளிப்படையாக விமர்சித்த சர்தார் வல்லபாய் படேல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்தார். “இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம் என்பது அந்த நிபந்தனைகளில் சில.

1948ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய படேல், ”நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதியாக இருந்தால் அதை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் நாம் காஷ்மீர் இந்தியாவுக்கு வேண்டும் என்று ஏன் விரும்புகிறோம் என்பதற்கான பதில் நேரிடையானது.

காஷ்மீர் இணைப்பு ஏன்?

”காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று அந்த மக்கள் ஆசைப்படுவதால் தான் இந்தியா அதற்கு முயற்சிக்கிறது. இந்தியாவுடன் காஷ்மீர் இணையவேண்டாம் என்று அங்கிருக்கும் மக்கள் கருதினால், நாம் அடுத்த நொடியே அங்கு இருக்கமாட்டோம். காஷ்மீர் மக்களின் விருப்பத்தை புறக்கணிக்க முடியாது” என்று முழக்கமிட்டார் சர்தார் படேல். (த ஹிந்துஸ்தான் டைம்ஸ், 31 அக்டோபர், 1948). அதன் அடிப்படையில், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370ஐ வடிவமைத்தவர்களில் முக்கியமானவர் சர்தார் படேல்.

சமஸ்தானங்களை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வர சமஸ்தான துறையை நிறுவினார் படேல். தனக்கு துணையாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.பி. மேனனை நியமித்துக் கொண்டார். 554 சமஸ்தானங்கள் இந்திய நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருந்தன. வல்லபாய் படேல், சமஸ்தான அறிக்கை ஒன்றை விடுத்தார்.

“இந்தியா விடுதலை பெற்று விட்டது. சிற்றரசுகள் நாட்டின் அமைதியையும், முன்னேற்றத்தையும் சீர்குலைத்து விடும். இந்த நாட்டிற்குள் வாழ்ந்து கொண்டு மாற்றானின் நிழலில் வாழ்வேன் என்பது மூடத்தனம். இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வது சிறந்த வாழ்வு. இதை உணருங்கள் ஒன்று படுங்கள்.” இன்னும் நீண்ட தான அறிக்கையை 554 சமஸ்தானங்களுக்கு அனுப்பினர்.

துணைநின்ற வி.பி.மேனன்

சில சமஸ்தானங்கள் சுதந்திரத்திற்கு முன்பு, இடைகால அரசின் போது இணைந்தன. படேல் பல சமஸ்தான மன்னர்களை, சிற்றரசர் களை நேரடியாக சந்தித்து, நாட்டுடன் இணைய வேண்டினர். குஜராத் மற்றும் தட்சணா சமஸ்தானங்கள் மும்பையோடு இணைந்தன. 216 சமஸ்தானங்கள் அந்தந்த பகுதியில் இருந்த அண்டை மாநிலங்களோடு இணைந்தன. இமாசல பிரதேச சமஸ்தானங்கள் ஒன்றிணைந்து இமாசலப் பிரதேசமானது. 26 சிறு சமஸ்தானங்கள் ஒரிசாவுடன் இணைக்கப் பட்டன.

பல்வேறு காரணிகளை எடுத்துச்சொல்லி, வல்லபாய் பட்டேலும் தன்னுடைய அரசு செயலாளராக இருந்த வி.பி. மேனனும் இணைந்து, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மன்னராட்சிப் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்கு அப்பகுதிகளை ஆண்ட ஆட்சியாளர்களை சம்மதிக்க வைத்தனர். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாத,ம் வல்லப்பாய் படேல் இறக்கும் வரையில் இந்த பணிகளை படேலின் இதயம் என்று விவரிக்கப்பட்ட வி.பி.மேனன் துணையுடன் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.