செய்திகள்

மகளிர் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு வி.எல்.சி.சி. கட்டணத்தில் 50% குறைப்பு

Spread the love

சென்னை, மார்ச் 19–

வி.எல்.சி.சி. நிறுவனத்தின் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு மத்திய அரசின் மருத்துவ கூட்டமைப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது. மகளிர் நலனில் அக்கறை கொண்டு மார்ச் மாதம் முழுவதும் இதன் 350 ஷோரூம்களில் உடல் எடை குறைப்பு அழகுக் கலை சிகிச்சைக்கு வி.எல்.சி.சி. கட்டணத்தில் 50% சலுகை அளிக்கும் என்று இதன் நிறுவனர் வந்தனா லுத்ரா தெரிவித்தார்.

வி.எல்.சி.சி. நிறுவனத்தில் பிரபலமான உடல் எடை குறைப்பு, ஆரோக்கியத்துக்கான சிறப்பு சிகிச்சைகள், இந்திய மருத்துவ கூட்டமைப்பு பரிந்துரைக்கும் சிகிச்சைகள் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு தனி நபருக்குமான உடல்தெரபி, ஆலோசனைகள், உணவு கட்டுப்பாடுகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே, ஒவ்வொரு மார்ச் மாதமும் ‘ஆரோக்கியத்துக்கான திருவிழா’ நடைபெற்று வருகிறது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் மாதம் முழுவதும் இந்த சலுகைத் திட்டம் செயல்படுகிறது.

இது குறித்து பேசிய வந்தனா லுத்ரா, “ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க உடல் ஆரோக்கியத்தில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்தில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு வழங்கிய அங்கீகாரம் இந்நிகழ்ச்சியின் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது’’ என தெரிவித்தார்.

கடந்த பல வருடங்களாகவே, ஆரோக்கியத்துக்கான சிறப்பு சேவைகளை, நிகழ்ச்சிகளை வி.எல்.சி.சி நிறுவனம் வழங்கி வருகிறது. நியாயமான விலையில் தரமான சேவைகளை வழங்கிவருகிறது. நிச்சயமான முடிவுகள், தவணை வசதி, முதியோர்களுக்கான சிறப்பு சலுகைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *