வர்த்தகம்

50 எம்.பி. திறனுடன் ‘செல்பி’ படம் எடுக்கும் விவோ புதிய கேமரா செல்போன் அறிமுகம்

சென்னை, ஜன.8–

50 எம்.பி. திறனுடன் ‘செல்பி’ படம் எடுக்கும் 108 எம்.பி. கேமரா செல்போனை விவோ அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.39 ஆயிரம் ஆகும்.

உலக அளவில் புதுமைமிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ தனது ‘வி’ மாடல் வரிசையில் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வி23 மாடல் ஸ்மார்ட்போன்களின் பின்புற பேனல்கள் நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் நிறம் மாறும் ஸ்மார்ட்போன்கள் இது ஆகும். இதில் செல்பி பிரியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முன்புறம் 50எம்பி இரட்டை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள நிறம் மாற்றும் ப்ளோரைட் ஏஜி கண்ணாடியானது சூரிய ஒளி மற்றும் பிற செயற்கை புற ஊதா கதிர்கள் இந்த ஸ்மார்ட்போன் மீது படும்போது அதன் நிறம் மாறுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய இரட்டை முன்பக்கக் கேமரா, துல்லியமாக செல்பிகளை எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் இன்றைய காலத்திற்கு ஏற்ப இந்த வி23 மாடல் ஸ்மார்ட்போன்கள் நேர்த்தியான வடிவமைப்பு, பிரீமியம் புகைப்படம் எடுக்கும் வசதி மற்றும் வேகமான கேமிங் மற்றும் அதிவேகமான பொழுதுபோக்குகளை வழங்கும் வகையிலும், புகைப்படக் கலைஞர்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வி23 மற்றும் வி23 புரோ ஆகிய 2 மாடல்களில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன்கள் சன்ஷைன் கோல்டு மற்றும் ஸ்டார்டஸ்ட் பிளாக் ஆகிய 2 வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் வி23 புரோ 38,990 ரூபாய் விலையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடனும், 43,990 ரூபாய் விலையில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடனும் கிடைக்கும்.

மேலும் இதன் வி23 மாடல் 29,990 ரூபாயில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடனும், 34,990 ரூபாய் விலையில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடனும் கிடைக்கும். வி23 புரோ விற்பனை வரும் ஜனவரி 13–ந்தேதி முதலும், வி23 விற்பனை வரும் 19–ந்தேதி முதலும் அனைத்து ஆப்லைன் ஸ்டோர்கள் மற்றும் பிளிப் கார்ட் மற்றும் விவோ இந்தியா இ–ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *