செய்திகள்

சென்டிரலில் ரெயிலிலிருந்து இறங்கும் பெண் பயணிகளிடம் செயின் பறிப்பு: அரியானாவைச் சேர்ந்த 5 பேர் கைது

Spread the love

சென்னை,ஜன.7 –

சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரெயில்களில் இருந்து இறங்கும் பெண் பயணிகளிடம் தங்கச்சங்கிலிகள் பறித்துச் சென்றதாக அரியானாவைச் சேர்ந்த 5 பேரைப் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 25 பவுன் தங்கச்சங்கிலிகளைப் பறிமுதல் செய்தனர்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரெயில்களில் இருந்து இறங்கும் பெண் பயணிகளிடம் ஒரு வடநாட்டுக் கும்பல் தங்கச்சங்கிலிகள் பறித்துச் சென்றதாக ரெயில்வே போலீசில் பலர் புகார் கூறியிருந்தனர்.

அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரெயில்வே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலு விசாரித்தார்.

அரியானாவைச் சேர்ந்த ராஜேந்திரக்குமார் வயது 44 எனபவரைக் கைது செய்து விசாரித்தார். அவர் தலைமையிலான கும்பல்தான் சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரெயில்களில் இருந்து இறங்கும் பெண் பயணிகளிடம் தங்கச்சங்கிலிகள் பறித்துச் சென்றவர்கள் என்று தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து ராஜேந்திரக்குமார் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் பதுங்கியிருந்த அரியானாவைச் சேர்ந்த மதன்லால் வயது 28, ராம்கியான்

வயது 40, சுரேஷ்குமார் வயது 38, சுனில்குமார் வயது 36 ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 பவுன் தங்கச்சங்கிலிகளைப் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *