செய்திகள் வாழ்வியல்

மெக்காவுக்கு அடுத்தபடியாக ஓராண்டில் 5 கோடி பக்தர்கள் பயணிக்கும் சபரிமலை! | புத்தக மதிப்புரை

Spread the love

உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும் சுமார் 5 கோடி பக்தர்களை கொண்டு மெக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பயணப்படுகிற ஓரிடம் சபரிமலை.

* நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களையுடைய தேங்காயை உடைக்கிறோம்.

* ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்திற்கு பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஐயப்பன் அவதாரம் தான்.

* சபரிமலையில் ஐயப்பன் தவம் இருக்கும் போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்பவர்களும் உண்டு.

இப்படி ருசிகரமான பல தகவல்களுடன் சபரிமலை ஐயப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும் என்ற நூலை வெளியிட்டுள்ளார் வடகரை செல்வராஜ்.

சபரிமலை ஐயப்பனின் வரலாறு, அவதார நோக்கம், ஐயப்பனின் அறுபடை வீடுகள், ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள், ஐயப்ப பக்தர்களுக்காக ஆன்லைன் சேவைகள், தங்கும் வசதிகள், போக்குவரத்து தகவல்கள் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐயப்பன் கோயில்களின் விவரங்கள், தொடர்பு விவரங்கள் என ஐயப்பனின் பலப்பல தகவல்களை இந்நூலில் தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர்.

கேரளா ஒரு பார்வை என்னும் தலைப்பில் ஆரம்பித்து கோவிலின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கடைசித் தலைப்பு வரைக்கும் 346 பக்கங்களில் தகவல்களைத் திரட்டி இருக்கிறார் பக்தி சிரத்தையுடன்.

தரிசனம் – அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழ் தெரியாத வாசகர்களுக்கும் புரிவதற்காக பத்து பக்கங்களில் ஆங்கிலத்திலும் முழு தகவல்களை பதிவு செய்திருக்கிறார். கார்த்திகை முதல் தேதி பிறந்ததும் மாலை அணிந்து ஐயப்பன் கோவிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஐயப்ப சாமி மக்கள் மட்டுமில்லாமல் ஆன்மீக அன்பர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான ஆன்மீகத் தகவல்கள் அடங்கிய நூல் இது.

ரேவதி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு:

பக்கம் 374. விலை ரூ 330

கிடைக்கும் இடம்:

புதிய எண். 75, பழைய எண். 26 /1, பாரதீஸ்வரர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை – 24, செல் : 9941 20 14 10.

  • வீ. ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *