செய்திகள்

கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: 5 பேர் பலி

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில்

கொரோனா மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: 5 பேர் பலி

பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி,

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து உள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டு உள்ளார்.

பிரதமர் இரங்கல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ராஜ்கோட்டில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் பற்றி செய்தியறிந்து ஆழ்ந்த துயரடைந்தேன். இந்த துரதிருஷ்ட சோக சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயர நினைவுகளில் நானும் பங்கு கொள்கிறேன்.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டி கொள்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சாத்தியப்பட கூடிய உதவிகளையும் அரசு நிர்வாகம் செய்யும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *