செய்திகள்

செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது

Spread the love

சென்னைஅக்.12

கொடுங்கையூர் மரக்கடையில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை களை பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகாகவிபாரதியார் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மில்லருக்கு ஒரு கடையில் செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. அவர் அங்கு சென்று சோதனை நடத்தியதில் பழைய மரங்களுக்கு அடியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அங்கிருந்த ஒரு டன் செம்மரக் கட்டகளை கைப்பற்றினார். இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும். இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக மரக்கடை உரிமையாளர் அசாருதீன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *