செய்திகள்

5 மொழியில் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படம்: மோடி வேடத்தில் சத்யராஜ்

சென்னை, மே 18–

5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ள நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், மோடியாக நடிக்க, நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, கதாநாயகனாக புகழ்பெற்று தற்போது சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பெரியாராக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார். அதேபோல் தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக அவர்மீது பலருக்கும் பெரும் மதிப்பும் கிடைத்தது.

மோடியாக சத்யராஜ்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க, நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் தயாராகும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படக்குழுவினரின் விவரங்களும் விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *