செய்திகள்

5 நாட்களுக்கு அனல்காற்று: 12 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்

சென்னை, மார்ச் 31–

தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கும் எனவும் கூறி உள்ளது.

3 டிகிரி அதிகரிப்பு

மேலும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுதவிர, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் அனல்காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளியில் செல்வதையும் வேலை நிமித்தமாக வெளியே செல்வதையும் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *