செய்திகள்

5 கோடி தடுப்பூசிகள் தயார்: மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் பைசர்

புதுடெல்லி, மே 27–

5 கோடி தடுப்பூசி டோஸ்களை தருகிறோம் விரைந்து அனுமதி அளியுங்கள் என்று இந்திய அரசிடம் அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘பைசர்’ கோரிக்கை வைத்துள்ளது.

அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ‘பைசர்’ தனது தடுப்பூசிக்கு விரைந்து அனுமதி அளிக்குமாறு இந்திய அரசிடம் கோரியுள்ளது. ஜூலை -– அக்டோபர் காலக்கட்டத்தில் 5 கோடி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்கத் தயாராக இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் பௌர்லா இந்திய அரசிடம் கூறியதாவது:

மத்திய அரசு மூலமாகவே ‘பைசர்’ தடுப்பூசி கொள்முதல் மேற்கொள்ளும் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்ததற்கும், பொறுப்பு மற்றும் இழப்பீடு விவகாரங்கள் தொடர்பாக பேச்சு நடத்த முன் வந்ததற்கும் நன்றி. உரிய நேரத்தில் இந்திய அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கீடு செய்து இந்தியாவுக்கான வினியோகத்தை தொடங்க ஏதுவாக இருக்கும். எனவே ‘பைசர்’ தடுப்பூசிக்கு இந்தியா விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பாக பைசர் தடுப்பூசி செயல்படும். இதை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தலாம். அத்துடன் 2-8 டிகிரி சூழலில் 1 மாதம் வரை இந்தத் தடுப்பூசியை சேமித்து வைக்க இயலும். மேலும் உலக சுகாதார அமைப்பாலும், பல்வேறு நாடுகளாலும் இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *