செய்திகள்

46 நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி: முதல் 10 இடங்களை பெற்றுள்ள நாடுகள்

1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 10 பதக்கம் பெற்று இந்தியா 6 வது இடம்

ஹாங்சோ, செப். 25–

46 நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா முதலிடத்தை பெற்றுள்ள நிலையில் இந்தியா 6 வது இடத்தை பெற்றுள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் மொத்தம் 655 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அக்டோபர் 8 ந்தேதி வரையில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 3 வது நாளில், இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 6 வெங்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 10 பதக்கங்களை வென்று, புள்ளிப் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

கொரியா–2, ஜப்பான்–3 வது இடம்

இந்த பட்டியலில் சீனா 28 தங்கப் பதக்கங்கள், 11 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 44 பதக்கங்களை வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. கொரிய குடியரசு 5 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்கள் வென்று 2 வது இடத்திலும், ஜப்பான் 3 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்கள் வென்று 3 வது இடத்தையும் பெற்றுள்ளது.

அதேபோல உஸ்பெக்கிஸ்தான் 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்று 4 வது இடத்தை பெற்றுள்ளது. ஹாங்காங் 2 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்கள் வென்று 5 வது இடத்தை பெற்றுள்ளது. தைபே ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதங்கங்களுடன் 7 வது இடத்தையும், மேக்கோ ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2 பதங்கங்களுடன் 8 வது இடத்தையும், ஈரான் 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 9 வது இடத்தையும் இந்தோனேசியா ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களுடன் 10 வது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *