போஸ்டர் செய்தி

45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்பட துவங்கும்

மதுரை,டிச.6–

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் 45 மாதங்களில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும் என மத்திய சுகாதார அமைச்சகம் ஐகோர்ட் மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையை விரைவாக அமைக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்ட 45 மாதங்களில் செயல்பட துவங்கும். மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதிக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பின்னர், மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கை, ஐகோர்ட் முடித்து வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *