செய்திகள்

45 கி.மீ. இலக்கை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் பினாகா ராக்கெட்

புதுடெல்லி, ஜூன் 26–

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் பினாகா ராக்கெட் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெற்றிகரமாக நடத்தியது.

ஒடிசா மாநிலம், பாலேசுவரம் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூரில் 25 பினாகா ராக்கெட்டுகள் ராக்கெட் ஏவுதள வாகனத்தில் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீட்டிக்கப்பட்ட தூரமான 45 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக இந்த ராக்கெட்டுகள் தாக்கி அழித்தன.

டிஆா்டிஓவின் வெற்றிகரமான இந்த சோதனைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையில் ஈடுபட்ட அனைத்து குழுவினருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனச் செயலர் சதீஷ் ரெட்டி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *