செய்திகள்

மணிமேகலை பிரசுரத்தின் 44 நூல்கள் வெளியீட்டு விழா

சென்னை, மார்ச் 4–

சென்னையில் நடைபெறும் 44வது புத்தகத் திருவிழாவில் 7–ந் தேதி மணிமேகலை பிரசுரத்தின் 44 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் மணிமேகலைப் பிரசுரத்தின் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் 44வது புத்தக திருவிழாவில் 44 புதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் ஒருங்கிணைப்புடன் 7–ந் தேதி மதியம் 1 மணியிலிருந்து 3.30 மணி வரை நடைபெறும் முதல் நிகழ்ச்சியில் மணிமேகலை பிரசுரம் தலைவர் லேனா தமிழ்வாணன் வரவேற்புரையாற்றுகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தலைமையில் ஒலிம்பிக் நிறுவன நிர்வாக இயக்குநர் பைசல், நடிகை காயத்ரி ரகுராம், திரைப்பட இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ், மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

3.30 மணியிலிருந்து நடைபெறும் 2வது நிகழ்ச்சிக்கு நீதிபதி ஜகதீஷ் சந்திரா தலைமை தாங்குகிறார். ரெயில்வே துறை ஐ.ஜி. வனிதா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மீனாட்சி சந்தோஷ் நாராயணன், நடிகர் நாசர், ஜெ. பாலசுப்பிரமணியன், நக்கீரன் கோபால், நடிகர் சித்ராலட்சுமணன், நடிகை நீலிமா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் அரியலூர் மாவட்டம் அழகாபுரத்தில் உள்ள தெய்வத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தங்க செல்வராசு சார்பில் லேனா தமிழ்வாணனுக்கு ‘பல்துறை எழுத்துச் செம்மல்’, இறை நம்பி என்கிற மல்லிகா பலராமனுக்கு ‘இறை எழுத்துச் செம்மல்’, டி.என். இமாஜானுக்கு ‘நகைச்சுவை எழுத்துச் செம்மல்’, பதிப்பாளர் ரவி தமிழ்வாணனுக்கு ‘பதிப்புச் செம்மல்’ விருது வழங்கப்படுகிறது. விழாவில் இலங்கை ஹாசிம் உமர், லண்டன் சக்திதாசன், நெல்லை கே.வசந்தன், சண்முகநாதன், தங்க. செல்வராசு ஆகியோர் 44 நூல்களின் தொகுப்பை பெற்றுக் கொள்கிறார்கள்.

44 நூல்கள்

விழாவில் வெளியிடப்படும் 44 நூல்கள் – நூலாசியரியர்கள் விபரம்:

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் 5 – தமிழ்வாணன், ஏ டாக்டர் ரீவைண்ட் (ஆங்கிலம்) – பென்ஜமின், இந்தியாவின் வீரத்திருமகன் நேதாஜி – பட்டுவேட்டி ஆர்.ராமநாதன், எடப்பாடியாரின் எழுச்சிமிகு வரலாறு – தங்க செல்வராசு, பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள் – துரை. சக்திவேல், கொசு கொட்டிய கோபுரங்கள் – எழில்மதி, யோகா அறிவியலும் ஆரோக்கியமும் – பி.கே. அய்யாசாமி, சிற்பி – சிற்றுளி – சிலையழகு – துரையரசன், லலிதா ஸகஸ்ரநாமம் – வி.ஏ. ராமசுப்பிரமணியன், உடுமலை வரலாறு – உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் ஆசிரியர் குழு, மயூரிக்குத் திருமணம் ஒருமுறைதான் – கே.எஸ். சந்திரசேகரன், எளிய வடிவில் ஐம்பெரும் காப்பியங்கள் – சிவ. உமாராசன், சிலப்பதிகாரத்தில் அறக் கருத்துகள் – விருத்தாம்பிகை அண்ணாதுரை, மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் – யாஸ்மின் பேகம், நான் ஒரு விளையாட்டு பொம்மையா – நாராயணி கிருஷ்ணசுவாமி, மெசேஜ் பார் ஏ பெட்டர் டூடே (ஆங்கிலம்) – ரினாஸ் ஜமால், வெற்றிப் படிகளின் வாசல் – வி.கே. ராமகிருஷ்ணன், உள்ளம் ஒரு சுமைதாங்கி – தெ. ஜெயச்சந்திரன்,

பிறர் நலனுக்காகவும் வாழ்வோம் – டி.வி.சங்கரன், வெற்றியின் இரகசியத்தைத் தேடுவோம் – கோ.மயில்வாணன், உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும் – பு.சி. இரத்தினம், ஊமை ரணங்கள் – அப்துல்லா, மனத்தை ஒருநிலைப்படுத்துதலும் அடையும் நன்மைகளும் – சுசர்ல வெங்கடரமணி, வெவ்வேறு உள்ளங்கள் இணையுமா? – அரிகரபுத்திரன், வேம்புவின் மரண வாக்குமூலம் – மா.மாறன், பாரதியாரைப் பற்றி புதிய பார்வை – ஜி.சுப்பிரமணியன், சிங்கப்பூரில் சரவணன் – மில்லத் அஹ்மது, இலக்கியங்களில் திருக்குறள் கருத்துக்கள் – உமா கல்யாணி, தென்னகத்து மாவீரன் இவன் – கே.சித்தார்த்தன், கபிலன் என்ன செய்யப் போகிறான் – மீனாட்சி மணாளன், நகரத்தாருக்கு ஏன் வேண்டும் நகர ஆதார் – ராமகுமாரன், இந்திய சுதந்திரத்தை போற்றுவோம் – அ.அசேன், அப்பாவின் விவசாயத்தை நாம் தொடர்வோம் அம்மா – சி.பழனியப்பன், எளிமையான பார்வையில் இந்துமதம் – ப.நரசிம்மன், கடிதங்கள் உணர்த்தும் சரித்திர உண்மைகள் – டயஸ் விஜய் பிரபாகரன், அறிவு எனும் ஆயுதம் – வை.ஜவஹர் ஆறுமுகம், நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு – சு.செந்தமிழ் செல்வன், அமெரிக்க வில்லியம் சரோயனின் மனிதநேய மாண்பு – கா.முருகேசன், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்குச் சில யோசனைகள் – அ.அருள்மொழிவர்மன், கமலா இல்லத்தில் ஒரு மர்மம் – கிருஷ்ணன் ரகு, பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள் – டி.என். இமாஜான், தடையுடைத்து முன்னேறு – பாக்யபாரதி, யார் தருவார் இந்த அரியாசனம் – சேலம் ஆறுமுகன், தடம் தந்த தந்தை தமிழ்வாணன் – லேனா தமிழ்வாணன்.

நிகழ்ச்சியை ஜெயஸ்ரீ சுந்தர், கே.ஸ்ரீகாந்த் தொகுத்து வழங்குகிறார்கள். அர்ச்சனா, ஆர்த்தி தமிழ்த்தாய் வாழ்த்து, மேலாளர் ஆர்.மோகன்ராஜ் நன்றியுரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை ப.உதயகுமார், ஜெகதீஸ், எஸ்.முருகேசன், வி.செந்தில், மணிமாறன், யசோதா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *