செய்திகள்

40,556 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 20.28 கோடி சிறப்பு கடனுதவி

Spread the love

40,556 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 20.28 கோடி சிறப்பு கடனுதவி:

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

 

திருவண்ணாமலை, மே 22–

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2539 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 40,556 உறுப்பினர்களுக்கு ரூ.20.28 கோடி கோவிட்-19 சிறப்பு கடனுதவியை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 4 நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படக் கூடிய “மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட்-19” சிறப்பு கடன் திட்டம் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவத:

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடன் திட்டம் மூலம் ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5000 அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூபாய் 1 லட்சம் வரை கோவிட்-19 சிறப்பு கடனுதவி வழங்கப்படுகிறது. கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 120 மகளிர் சுய உதவிக் குழுக்களில், 50 குழுக்களில் உள்ள 684 உறுப்பினர்களுக்கு ரூ.34.20 லட்சம் கோவிட்-19 சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 2539 சுய உதவி குழுக்களில் உள்ள 40,556 உறுப்பினர்களுக்கு ரூ.20.28 கோடி கோவிட்-19 சிறப்பு கடனுதவி வழங்கப்படுகிறது.

கூட்டுறவுத் துறை மூலமாக வெளிமார்க்கெட்டில் ரூ.699 க்கு விற்கப்படும் மளிகை பொருட்கள் அனைவருக்கும் குறைநத விலையில் கிடைக்கும் வகையில் ரூ.500 விலையில் மளிகை பொருட்கள் கொண்ட மொத்தம் 45,000 பைகள் நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் துறை மூலமாக பதிவு செய்த பல்வேறு தொழில் செய்யும் 75,406 தொழிலாளர்களுக்கு 1131 டன் அரிசி, 76 டன் துவரம் பருப்பு, 75,406 கி.லி. பாமாயில் கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகள் மூலமாக விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கே.எஸ். கந்தசாமி,, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்

நந்தகுமார், ஆரணி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எ. அசோக்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பூங்கொடி, துணைத்தலைவர் கே.டி.குமார், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *