செய்திகள்

40 ஆயிரம் குடும்பங்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறி, 5 டன் மளிகை பொருட்கள்

வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் 58 நாட்களாக

40 ஆயிரம் குடும்பங்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறி, 5 டன் மளிகை பொருட்கள்

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்

 

சென்னை, மே 22

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தில் கடந்த 58 நாட்களாக தொடர்ந்து ஏழை மக்களுக்கு 200 டன் அரிசி, 75 டன் காய்கறி போன்ற நிவாரண உதவிகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கியுள்ளார்.

தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி தண்டையார்பேட்டை 40 வது வட்டம் வ.உ.சி. நகர், ஒத்தவாடை, பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், நிவாரண உதவியாக வழங்கினார்.

அப்போது அப்பகுதியில் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசினார்.

கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் பரவியதையடுத்து பாரத பிரதமர் மோடி மார்ச் 24 ந் தேதி தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அதன் காரணமாக தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோய் தொற்றை தடுக்க வேண்டி 4 கட்டங்களாக ஊரடங்கை விரிவுபடுத்தினார்.

மாவட்டங்கள் வாரியாக நோய் தொற்று கண்காணிப்பு பணிகளுக்காக ஆய்வு மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் குழுவை ஏற்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாவட்டங்கள் தோறும் 3 பிரிவுகளாக பச்சை, மஞ்சள், சிகப்பு என பிரிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்றின் காரணமாக அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை யொட்டி பொதுமக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையில்லா உணவுகளையும் வாழ்வாதாரத்தை இழந்து பறிதவிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட தொகுப்புகளை நிவாரணமாக வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் நலனை முழுமையாக பாதுகாக்கும் முயற்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் எல்லை சாமியாக அவதரித்துள்ளார்.

58 நாட்களாக உதவி, விழிப்புணர்வு

மேலும் வடசென்னை பகுதிகளில் பரவிவரும் நோய் தொற்றை தடுக்க வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகத்தின் சார்பில் கடந்த 58 நாட்களாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய, மக்கள் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு சுமார் 200 டன் அரிசி, 75 டன் காய்கறிகள், 5 டன் மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசின் நெறிமுறைகளை உணர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பகுதி செயலாளர் ஆர்.எஸ். ஜெனார்தனம், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், வட்ட செயலாளர்கள் இ.வேலு மேஸ்திரி, வி.எஸ்.புருஷோத்தமன், மற்றும் எல்.எஸ்.மகேஷ்குமார், டி.பிரபாகரன், ஏ.இளவரசன், இஎம்எஸ் நிர்மல் குமார், டி.எம்.ஜி.பாபு, பி.சேகர், எஸ்.மோகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *