செய்திகள்

தேர்தல் களத்தில் 4 அணிகள்

சென்னை, மார்ச் 10–

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தலைமையில் மொத்தம் 4 அணிகள் களத்தில் உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. அண்ணா தி.மு.க.விலிருந்து தே.மு.தி.க. விலகியதால், தனித்து போட்டியிடுகிறதா அல்லது வேறு யாருடன் கூட்டணி சேருகிறதா? என்பது இன்னமும் தெரியவில்லை.

தற்போதைய சூழ்நிலையில், நேற்று வரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பங்கீடு விவரம் வருமாறு:-

அண்ணா தி.மு.க. கூட்டணி

பா.ஜ.க. – 20

பா.ம.க. – 23

(த.மா.கா. மற்றும் சிறிய கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதன்பிறகே அண்ணா தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும்)

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. – 174

காங்கிரஸ் – 25

மார்க்சிஸ்ட் – 6

கம்யூனிஸ்ட் கட்சி – 6

ம.தி.மு.க. – 6

விடுதலை சிறுத்தைகள் – 6

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 3

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 3

மனிதநேய மக்கள் கட்சி – 2

தமிழக வாழ்வுரிமை கட்சி – 1

மக்கள் விடுதலை கட்சி – 1

ஆதித் தமிழர் பேரவை – 1

மக்கள் நீதிமய்யம் கூட்டணி

மக்கள் நீதி மய்யம் – 154

சமத்துவ மக்கள் கட்சி – 40

இந்திய ஜனநாயக கட்சி – 40

அ.ம.மு.க. கூட்டணி

ஓவைசி – 3

கோகுல மக்கள் கட்சி – 1

மருது சேனை சங்கம் – 1

(மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதன் பிறகே அ.ம.மு.க. போட்டியிடும் தொகுதிகள் தெரியவரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *