செய்திகள்

செல்போன் பறிப்பு: 4 பேர் கைது

Spread the love

காஞ்சீபுரம், நவ. 9–

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த மேலாத்தூர் பகுதியில் 4 பேர் பதுங்கி இருப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சோமங்கலம் மேலாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற வல்லரசு (25), ஆனந்தராஜ் (23), அஜித் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் செய்யூரை அடுத்த சூனாம்பேடு இல்லீடு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரதாப் என்பவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 செல்போன்களை கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *