செய்திகள்

4 பந்துகளில் 4 விக்கெட்: அயர்லாந்து வீரர் உலக சாதனை

அபுதாபி, அக். 19-

குர்டிஸ் ஹேம்பரின் அபாரமான பந்துவீச்சால் அபு தாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஏ பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து அணி.

அயர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் குர்டிஸ் ஹேம்பர் 4 ஓவர்கள் வீசியதில் 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த 4 விக்கெட்டுகளுமே 4 பந்துகளில் ஹேம்பர் வீழ்த்தினார். ஹேம்பர் வீசிய 10வது ஓவரின் 2வது பந்து முதல் 5-வது பந்துவரை தொடர்ந்து 4 விக்கெட்டுகளை சாய்த்து நெதர்லாந்து அணியின் சரிவுக்கு காரணமானார். ஹேம்பர் டி20உலகக் கோப்பைப் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தினர்.

முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 107 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து வெற்ற பெற்றது. இதன் மூலம் ஏ பிரிவு தகுதிச்சுற்றில் அயர்லாந்து அணி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.இதற்கு முன் டி20 போட்டிகளில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை 2 பேர் வீழ்த்தியிருந்தனர். 2019ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஆப்கன் வீரர் ரஷித் கானும், 2019ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராகஇலங்கை வீரர் மலிங்காவும் வீழ்த்தியிருந்தனர். 3-வதாக அயர்லாந்து வீரர் ஹேம்பர் இணைந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-வது பந்துவீ்ச்சாளர் எனும் பெருமையையும் ஹேம்பர் பெற்றார். இதற்கு முன் 2007ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஆஸ்திரேலிய வேகப்புயல் பிரட் லீ ஹாட்ரிக் வீழ்த்தியதே இதுவரை டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாதனையாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *