சினிமா

4 கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் துப்பறியும் நாயின் சாகசக் கதை ‘ராக்கி’!

சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ‘ராக்கி’ என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர் செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர்.

எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் செய்கின்ற சமூக விரோதச் செயல்களுக்காக சந்தோஷ் அவர்களைக் கைது செய்து லாக்கப் பில் அடைக்கிறார்.

சாயாஜி, சுந்தர் இருவரும் சந்தோஷின் உதவியாளர்கள் ராஜா, சேகர் இருவரையும் கைக்குள் போட்டுக் கொள்கின்றனர். லாக்கப்பில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

சந்தோஷ் கொதிப்படைகிறார். அவர்களைக் கைது செய்ய தேடிப்போகிறார். ராக்கியும் அவருடன் செல்கிறது.

எம்.எல்.ஏ.சாயாஜி, சுந்தர், இன்ஸ்பெக்டர் கள் ராஜா, சேகர் நால்வரும் கூட்டுச்சதி செய்து சந்தோஷைக் கொலை செய்துவிடுகின்றனர்.

இன்ஸ்பெக்டர்கள் ராஜா, சேகர் இருவரும் கமிஷனர் செல்வத்திடம், சந்தோஷைக் கொலை செய்தது யாரென்று தெரியவில்லை என்று பொய் சொல்கின்றனர்.

ஆனால், ராக்கி சந்தோஷைக் கொலை செய்த எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர், ராஜா, சேகர் ஆகிய நால்வரையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பது தான் திரையிடும் காட்சிகள் என்கிறார் இயக்குனர் கே.சி.பொக்காடியா. எழுத்தும் இவரே.

ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம், சாயாஜி ஷிண்டே, ஓ.ஏ.கே. சுந்தர், கராத்தே ராஜா, ரமேஷ் நடிகர்கள்.

படத்தொகுப்பு: லெனின், இசை : பப்பிலஹரி, ஒளிப்பதிவு: அஜ்மல்கான், பாடல்கள்: ஏ.ஆர்.பி.ஜெயராம், நடனம்: பாப்பி.

நாயின் சாகசம், அதிரடி ஆக்க்ஷன் திரை விருந்து என்கிறார் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *