செய்திகள்

4% அகவிலைப்படி உயர்வு: ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நன்றி

Makkal Kural Official

சென்னை, மார்ச் 14–

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்ததற்கு பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12.3.2024 அன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அகவிலைப்படி உயர்வை அறிவித்ததையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு சட்டமன்றச் செயலக நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநிலமையச் சங்கம்,

தமிழ்நாடு வேளாண்மைத் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக தமிழாசிரியர் கழகம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (தியோடர்), தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் (தீபம்), தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை பணியாளர்கள் சங்கம்,

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம், தமிழக தமிழாசிரியர் கழகம், டாக்டர் இராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

16 லட்சம் ஊழியர்கள்

இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுகிறார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.2,587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *