செய்திகள்

4வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து 2வது வெற்றி

Makkal Kural Official

லண்டன், .செப். 28–

4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-–1 என முன்னிலைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.மழை காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), பென் டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 8 ஓவரில் 66 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் 34 பந்தில் 28 ரன்களும், டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.அதன்பின் ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 126 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி சார்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், ஆர்ச்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 2–2 என சமநிலை செய்துள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை பிரிஸ்டோலில் நடக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *