சென்னை, நவ.28–
இந்த ஆண்டின் சிறந்த மாநிலத்துக்கான ‘இந்தியா டுடே விருது’ தமிழகத்துக்கு கிடைத்துள்ளதற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–
இந்தியா டுடே இதழ் ஆய்வில் அனைத்துவகை செயல்பாடுகளிலும் சிறந்த மாநிலத்துக்கான பட்டியலில் தொடர்ந்து 3வது முறை தமிழகம் முதலிடம் பெற்று, அதற்கான விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசு மக்கள் நலனுக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.