செய்திகள்

தமிழகத்தில் 3 ஆயிரத்து 978 பேருக்கு கொரோனா சிகிச்சை

சென்னை, மார்ச்.5-

தமிழகத்தில் 3 ஆயிரத்து 978 பேருக்கு கொரோன சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நேற்று ஒரே நாளில் மட்டும் 482 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 189 பேரும், கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 42 பேரும், குறைந்தபட்சமாக திருவண்ணாமலை, தென்காசி, கரூரில் தலா இருவரும், தர்மபுரி, ராமநாதபுரம், திருப்பத்தூர், தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் புதிதாக பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 53 ஆயிரத்து 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 644 பேர் ஆண்கள், 3 லட்சத்து 37 ஆயிரத்து 770 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் – 35 பேர் ஆகும்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 490 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் சென்னையில் 167 பேரும், கோவையில் 51 பேரும், செங்கல்பட்டில் 49 பேரும் அடங்குவர். மேலும் 8 லட்சத்து 36 ஆயிரத்து 963 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 3,978 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பலனின்றி நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை 12 ஆயிரத்து 508 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 188 தனியார் ஆய்வகங்கள் என 257 ஆய்வகங்கள் உள்ளன. நேற்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 50 ஆயிரத்து 543 ஆகும். இதுவரை 1 கோடியே 73 லட்சத்து 64 ஆயிரத்து 809 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *