செய்திகள்

367 மகளிர் சுய உதவிக் குழுக்கள், 142 தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உதவி: கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார்

Spread the love

திருவள்ளூர், ஜூலை 20–

திருவள்ளூர் மாவட்டத்தில் 142 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 39.45 கோடி மற்றும் 367 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 23.73 கோடி வங்கி கடன் உதவிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்

திருவள்ளுரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், 142 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 39.45 கோடி மதிப்பிலும் மற்றும் 367 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 23.73 கோடி வங்கி கடன் உதவிகளை வழங்கி பேசியதாவது:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் துவங்கப்பட்ட முகாம்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிக சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இம்முகாம்களை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் வங்கி மற்றும் வங்கி சார்ந்த சேவைகளை அறிவுறுத்தி மீண்டும் 01.07.2019 முதல் 15.08.2019 வரை நான்கு இடங்களில் குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கான கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது. இன்று திருவள்ளுரில் பல்வேறு வங்கிகள் சார்பாக முதற் கட்டமாக கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. விழாவில் இந்தியன் வங்கியின் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ. 23.33 கோடி அளவிலான குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன்களும், கனரா வங்கியின் சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ. 14.23 கோடி அளவிலான கடன்களும், பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் 2 பயனாளிக்கு ரூ. 1.09 கோடி கடன் வழங்கப்பட்டது. பரோடா வங்கி சார்பில் 7 நபர்களுக்கு ரூ. 25.7 இலட்சம் கடன் வழங்கப்பட்டது. யூனியன் வங்கி சார்பில் 5 நபர்களுக்கு 55 லட்சம் கடன் வழங்கப்பட்டது. பல்வேறு வங்கிகளை சார்ந்த சுமார் 250 சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் பங்கேற்று, பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கைவினைப் பொருட்களின் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டப் பின் இந்தியன் வங்கி பூவிருந்தவல்லி மண்டலம் சார்பாக, 367 மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு ரூ. 23.73 கோடிக்கான கடன் உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சாரியா, களப் பொது மேலாளர் சந்திரா ரெட்டி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் வி.மணிவண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரம் ஞானமுத்து, இந்தியன் வங்கியின் பூவிருந்தவல்லி மண்டல மேலாளர் எம்.வெங்கடேசன், துணை மண்டல மேலாளர் சி.ராஜேந்திரன், வங்கி நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்க்ள, சிறு மற்றும் குறு தொழில் முனைவேர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *