செய்திகள்

சென்னையில் எந்த நேரமும் இடிந்து விழும் ஆபத்தில் 354 கட்டிடங்கள்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

Spread the love

சென்னை, டிச 3 –

சென்னை நகரில் எந்த நேரமும் இடிந்து விழக்கூடிய ஆபத்தில் 354 கட்டிடங்கள் இருக்கும் நிலையில், 139 கட்டிடங்கள் இடித்து தள்ளும் நிலையில் உள்ளன. இந்தக் கட்டிடங்களின் சொந்தக்காரர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள். இதுபோன்று இனி ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது எனக் கருதி அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் மொத்தம் 354 கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதில் மூன்றில் இரண்டு பங்கு ராயபுரம் மண்டலத்தில் அமைந்துள்ளது. ‘இதில் பெரும்பாலான கட்டிடங்கள் செளகார்பேட்டையில் உள்ளன. இந்த கட்டிடங்களால் ஆபத்து இருக்கிறது என்றாலும், இதனை இடிப்பதற்கு எதிர்ப்பும் உள்ளது’ என மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்தாலும், அங்கு இருப்பவர்களுக்கு உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படக் கூடும். பலத்த காயத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் இதுபோன்று வட சென்னை, தி. நகர், நந்தனம் பகுதிகளில் அசம்பாவிதம் நடந்துள்ளன.

மாநகராட்சி உதவியாளர் மற்றும் நிர்வாக பொறியாளர்கள் இதுபோன்ற கட்டிடங்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பது பற்றி ஆய்வு நடத்தினர். அதில் 350 கட்டிடங்கள் இடியும் நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டது. 15 வழக்குகள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளன. இதில் பள்ளிக்கரணையில் உள்ள நூலகமும், சிட்லப்பாக்கம் தொழிற்சங்க பஞ்சாயத்து பள்ளிகளும் அடங்கும் என தெரிவித்துள்ளனர்.

இதில் 140 கட்டிடங்களை இடிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராயபுரத்தில் 236 கட்டிடங்களில் 82 கட்டிடங்களையும், அண்ணா நகர் பகுதியில் இருக்கும் 42 கட்டிடங்களில் 9 கட்டிடங்களையும், கோடம்பாக்கம் பகுதியில் இருக்கும் 27 கட்டிடங்களில் 22 கட்டிடங்களையும் இடிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *