செய்திகள்

350 செண்டைமேள கலைஞர்கள் கின்னஸ் சாதனை முயற்சி

Spread the love

சென்னை, அக்.9-

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் 350 செண்டைமேள கலைஞர்கள் தொடர்ந்து 40 நிமிடம் வாசித்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன், குருவாயூரப்பன் கோவில் ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சார்பில் சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் செண்டைமேளம் வாசிப்பதற்கு இலவசமாக கற்றுக்கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு, நேற்று மாலை 150 மாணவர்கள் அரங்கேற்றம் நிகழ்ச்சி செண்டைமேள ஆசிரியர் கோவிந்தராஜ் என்ற கோபி தலைமையில் கோவிலில் நடந்தது.

இதற்காக கோவில் எதிரில் உள்ள சாலையில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு 150 மாணவர்களுடன், கேரளாவில் இருந்து வந்திருந்த 200 செண்டைமேள கலைஞர்களும் நின்று 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து அரங்கேற்றம் செய்தனர். ஒரே நேரத்தில் 350 செண்டைமேள கலைஞர்கள் தொடர்ந்து 40 நிமிடம் வாசித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *