செய்திகள்

33 வது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்: ஜப்பான் முதலிடம், இந்தியா 33 வது இடம்

Makkal Kural Official

26 பதக்கத்துடன் 6 வது இடத்தில் அமெரிக்கா

பாரீஸ், ஜூலை 31–

33 வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், ஜப்பான் 6 தங்கத்துடன் மொத்தம் 13 பதக்கங்களை வென்று முதலிடத்திலும் அமெரிக்கா 4 தங்கத்துடன் 26 பதக்கங்களை வென்று 6 வது இடத்திலும் உள்ள நிலையில், இந்தியா 2 வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப்பட்டியலில் 33 வது இடத்தில் உள்ளது.

உலகின் மிக முக்கிய விளையாட்டுப் போட்டிகளான 33 வது ஒலிம்பிக் திருவிழா, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் களை கட்டியுள்ளது. ஜூலை 26 ந்தேதி தொடக்க விழா நடைபெற்ற நிலையில், ஆகஸ்ட் 11 ந்தேதி வரையில் 16 நாட்கள் நடைபெறும் கோடைகால ஒலிம்பிக்கில், குறைந்தது 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரிஸ் நகரம் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒரு வரலாற்று உறவைக் கொண்டுள்ளது. 1900 மற்றும் 1924 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் தான் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீசில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்கான போட்டிகளில் உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் இருந்து வீரர்கள், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கணைகள் கலந்து காெண்டுள்ளனர். இதில் டென்னிஸ், பாய்மரப் படகுப் போட்டி, தொடர் ஓட்டம், துப்பாக்கிச் சுடுதல் என தமிழ்நாட்டில் இருந்து 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு 33 வது இடம்

33 வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய 5 வது நாளான இன்று பிற்பகல் வரையில், ஜப்பான் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும், ஆஸ்திரேலியா 6 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும், பிரான்ஸ் 5 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 4 வது இடத்திலும், தென் கொரியா 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் 11 பதங்கங்களுடன் 5 வது இடத்தையம் பிடித்துள்ளது.

இதில் அமெரிக்கா 4 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் 6 வது இடத்திலும், இங்கிலாந்து 4 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதங்கங்களுடன் 7 வது இடத்திலும், இத்தாலி 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 8 வது இடத்திலும் கனடா மொத்தம் 6 பதக்கங்களுடன் 9 வது இடத்திலும் ஹாங்காங் 3 பதக்கங்களுடன் 10 வது இடத்திலும் உள்ளது. இந்தியா, மால்டோவா நாடுகள் தலா 2 வெண்கலத்துடன் 33 வது இடத்தை பிடித்துள்ள நிலையில், உக்ரைன் உள்ளிட்ட 9 நாடுகள் தலா ஒரு வெண்கலத்துடன் 35 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *