செய்திகள்

31,367 பேருக்கு ரூ.15 கோடி நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

நெல்லை மாவட்டத்தில்

31,367 பேருக்கு ரூ.15 கோடி நலத்திட்ட உதவிகள்:

அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

 

திருநெல்வேலி, ஜூன்.30–

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 31,367 பேருக்கு ரூ.15 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்.

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல அலுவலக கூட்ட அரங்கில் ஊரக புத்தாக்க திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி 31,367 பேருக்கு 15 கோடி மதிப்பிலான நலத்திட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது:–

ஊரக புத்தாக்கத் திட்டம் ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை மற்றும் வள்ளியூர் ஆகிய 4 வட்டாரங்களைச் சார்ந்த 102 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களைச் சார்ந்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள் பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் துவங்கிடவும் என மொத்தம் ரூ.13 கோடியில் கொரோனா சிறப்பு நிதி உதவி 2745 பயனாளிகள் பயன்பெறக் கூடிய வகையில் சிறப்பு நிதி உதவிக் தொகுப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு அதிகபட்மாக ரூ.50ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்த 6 கோடி ரூபாய் நீண்ட கால தனிநபர் தொழில் கடன் 1168 நபர்களுக்கும் வழங்கப்படும்.

உற்பத்தி குழுக்களுக்கு ஒரு முறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் என 1475 நபர்களுக்கு 88.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 12 தொழில் குழுக்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் வீதம் 18 லட்சம் ஒருமுறை மூலதமான வழங்கப்படும். புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 3.34 கோடி வழங்கப்படும். ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 500 நபர்கள் வீதம் உற்பத்தியாளர் கூட்டமைபிற்கு தலா 10 லட்சம் ரூபாய் என 40 லட்சம் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக 1168 நபர்களை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20ஆயிரம் என்ற அடிப்படையில் நிதி வழங்குவதற்காக மொத்தம் 2.33 கோடி ரூபாய் நீண்ட கால கடனாக வழங்கப்படும் என ஊரக புத்தாக்க திட்ட நிதியுதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13 1/4 லட்சம் மாற்றத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே வழங்கப்படும் என ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த 28560 மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையினை கிராம நிர்வாக அலுவலாகள் தங்களது வீடுகளுக்கு வரும்போது கான்பித்து நிவாரணத் தொகை ரூ.1000/–-பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேச ராஜா, ஆவின் தலைவர் சுதாபரமசிவன், பரணி சங்கரலிங்கம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுந்தரம், மாற்றுத்திறளரிகள் நலத்துறை சாந்தி குளோரின், ஊரக புத்தாக்க திட்ட அலுவலர் முத்தமிழ் வட்டாச்சியர்கள் தாஸ்பிரியன் (பாளையங்கோட்டை), பகவதி பெருமாள் (திருநெல்வேலி) உதவி ஆணையர் தச்சநல்லூர் மண்டலம் ஐயப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *