செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பிறகு நகரத் தொடங்கிய 4000 சதுர கி.மீ கொண்ட மிகப்பெரிய பனிக்கட்டி

தலைநகர் டெல்லியை போல் 2 மடங்கு பெரியது

அண்டார்டிகா, நவ. 25–

4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அங்கிருந்து நகரத் தொடங்கியுள்ளது.

அண்டார்டிகாவின் வேடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய ‘ஏ23ஏ’ பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது. அண்டார்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986-ஆம் ஆண்டு உடைந்து நகரத் தொடங்கிய ஏ23ஏ பனிக்கட்டி, சிறிது காலத்திலேயே வேடல் கடல் பகுதியில் தரைதட்டி நின்றது.

4000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு

அதன் பிறகு அந்தப் பனிக் கட்டி மிகப் பெரிய பனித் தீவாக திகழ்ந்து வந்தது. சுமார் 4,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அந்தப் பனிக்கட்டி, உலகிலேயே மிகப் பெரியது ஆகும். டெல்லியைப் போல் இரண்டரை மடங்குக்கும் மேல் பெரிய இந்தப் பனிக்கட்டி, 400 மீட்டர் உயரம் கொண்டது.

இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் பனிக்கட்டி நகரத் தொடங்கியதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பனிக்கட்டி நகருவதையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தெற்கு ஜார்ஜியா பகுதிக்கு அருகே அந்தப் பனிக்கட்டி தரைதட்டினால் அங்குள்ள கடல்வாழ் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், இந்தப் பனிக்கட்டி உருகுவதால் அதிலுள்ள கனிமப் பொருள்கள் வெளிவந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *