செய்திகள்

வேன்கள் மோதல்: 3 பேர் பலி

ராமநாதபுரம், ஜன. 24

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் காஜா சாகுல் அமீது (வயது52). குவைத்தில் வேலை பார்க்கும் இவர், ஊருக்கு விடுமுறைக்கு வந்திருந்தார். இன்று அவர் மதுரையில் இருந்து விமானம் மூலம் குவைத் செல்ல வீட்டில் இருந்து ஆம்னி வேனில் புறப்பட்டார். அவருடன் மனைவி ரூபினா (42), மகள் ரகுமத் பாத்திமா, இனாத், மாமியார் ஷாஜகான் பீவி (60) ஆகியோரும் வழியனுப்ப புறப்பட்டனர். அகமது அசன் (30) ஆம்னி வேனை ஓட்டினார்.

இந்த ஆம்னி வேன் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி தபால்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 வேன்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் டிரைவர் அகமது அசன், முன் இருக்கையில் இருந்த காஜா சாகுல்அமீது ஆகியோர் இருக்கை யிலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.மேலும் ஷாஜகான் பீவியும் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *