சென்னை ,ஜன .12 –
யூடியூப் சேனலில் பெண்களை இழிவுபடுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை டாக் என்ற பெயரில் யூடியூப் தனிசேனல் கணக்குத் தொடங்கி அதில் மக்கள் கருத்து என்ற பெயரில் பெசண்ட் கடற்கரைக்கு வரும் பெண்களிடம் தரம் தாழ்ந்த கேள்விகளைக் கேட்டு சிலர் வீடியோ படம் எடுத்தனர். அதை யூடியூப் சேனலில் வைரலாக்கி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டார்கள். அது வைரல் ஆனது. இதைப் பார்த்தவர்கள் இதில் பெண்களை இழிவுபடுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பான புகார் சைபர் கிரைம் போலீசுக்கு வந்தது. அவர்களும் அந்த சென்னை டாக் என்ற யூடியூப் தனிசேனலை பார்த்தனர் . அதில் பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதைக் போலீசார் கண்டறிந்தனர். அது தொடர்பாக விசாரித்தனர்.
சென்னையைச் சேர்ந்த தினேஷ்குமார் வயது 40 , அசன்பாஷா வயது 35 , கேமராமேன் அருண்பாபு 38 வயது 35 ஆகியோரை கைது செய்தனர். பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.