செய்திகள்

3 மாநிலங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: உளவுத் துறை எச்சரிக்கை

மும்பை,மார்ச்.2–

மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மும்பை தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மேற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. நீண்ட தூரம் செல்லும் ரயில்களை கண்காணிக்கவும், குறிப்பாக காஷ்மீர் போன்ற எல்லையோர பகுதிகளில் இருந்து வரும் ரயில்களை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு குஜராத் ரயில்வே போலீசாருக்கு உளவுத்துறை அனுப்பி உள்ள கடிதத்தில், பொது இடங்கள், குறிப்பாக ரயில் நிலையங்கள், கோயில்கள், பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதி உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும். புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பை சேர்ந்த சிலர் ஐதராபாத்தில் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *