முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
மதுரை, ஜூலை 16–-
மதுரையில் ரூ.218 கோடியே 20 லட்சம் செலவில் 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் 3½ லட்சம் புத்தகங்களுடன் 8 தளங்களில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
‘‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு உள்ளது.
நூலகத்தின் நுழைவு வாயிலில், கருணாநிதி அமர்ந்து எழுதுவது போல் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நூலகத்தை திறந்து வைக்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை, அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் நூலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கருணாநிதி சிலையை திறந்துவைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் முதலமைச்சர், கலைஞர் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு,, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, சு.வெங்கடேசன், எச்.சி.எல் நிறுவனர் ஷிவ்நாடார், எச்.சி.எல். நிறுவன தலைவர் ரோஷினி ஷிவ்நாடார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அறிவியல் பூங்கா
அதன்பின் முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு நூலகம் முழுவதும் சுற்றி பார்த்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவு பகுதியை முதலில் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பிரிவுக்கு சென்றார். அங்கு இருந்த சிறுவர்களிடம், ஸ்டாலின் நூலகத்திற்கு அடிக்கடி வந்து புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றார்.
அதற்கு சிறுமிகள், நாங்கள் தினமும் வருவோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினர். தொடர்ந்து முதலமைச்சர், சிறுவர்களின் அறிவியல் பூங்கா பகுதிக்கு சென்றார். அங்கு இருந்த அறிவியல் உபகரணங்களை பார்வையிட்டார். அப்போது குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தளத்தில் நடந்து மகிழ்ந்தார். கலைஞர் நூல்கள் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்கு இருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.
அதன்பின் மதுரையின் சிறப்புகளை விளக்கும் கலை அரங்கத்திற்கு சென்று அங்குள்ள புகைப்படங்களை ரசித்து பார்த்தார். அதன்பின் விழா நடைபெறும் அரங்கத்திற்கு சென்று கலந்துகொண்டார்.
வாகன காப்பகம்,
எஸ்கலேட்டர்
இந்த நூலகத்தில் தரைத்தளத்துக்கு கீழ் பகுதி வாகன காப்பகமாகும். தரைத்தளம் முதல் 2-ம் தளம் வரை தானியங்கி நகரும் மின் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி, லிப்ட் வசதி, ஒருங்கிணைந்த குளிரூட்டப்பட்ட வசதி, வாசகர்களுக்கான இணைய வசதி (வை-பை), படிக்கும் வசதியுடன் கூடிய திறந்தவெளி மாடித்தோட்டம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
தரைத்தளத்தில் தமிழ்நாடு பாடநூல்கள், போட்டித்தேர்வுக்கான நூல்கள் உள்ளன. மேலும் பார்வையற்றோர் பயில ‘பிரெய்லி’ எழுத்துக்களிலான 1,800 நூல்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் தளத்தில் குழந்தைகளுக்கான 30 ஆயிரம் நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டு உள்ளன. 2-ம் தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில், தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், கடிதங்கள், சுயசரிதை நூல்கள் மற்றும் கணினி அறிவியல், இதழியல், உளவியல், மெய்யியல், மானுடவியல், சட்டம், பொருளாதாரம், தமிழ் பண்பாடு, கலாசாரம், தமிழின் தொன்மை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள், அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு மற்றும் புவியியல் சார்ந்த சுமார் ஒரு லட்சம் தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன.
தத்துவம், சமயம், சமூக அறிவியல்
3-–ம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவில் கணிபொறியியல், தத்துவம், சமயம், சமூக அறிவியல், பொருளாதாரம், சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், பொறியியல், வானியல், கலை, நுண்கலை, விளையாட்டு, சினிமா, வேளாண்மை, உணவு, வரலாறு, புவியியல் உள்பட அனைத்து பாடங்களிலும் பதிப்பிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச அள